Monday, December 27, 2010

மரணம்

தொட்டுவிட முடியாத உன் நினைவுகள்
மறந்துவிட முடியாத உன் ஞாபகங்கள்
வழி நடத்துகின்றன என்னை
மரண படுக்கையை நோக்கி...
.

பிரிவு

நீ அருகில் இருந்தபோது 
எனக்கு உன்னுடன் பேசுவதற்கு 
நேரமில்லை .........!
நீ விலகி சென்றுவிட்டாய் 
இப்போது என்னுடன் பேசுவதற்கு 
யாரும்இல்லை .........
!

சுதந்திரம்

கணினியின்
கண்டுபிடிப்புக்கு பின்
உலகமே என் விரல் நுனியில் என
மார் தட்டுகிறாயே !
ஒரு நாற்காலியில் சிறைபடுகிறது
உன் வாழ்கை என்பதை உணர்வது எப்போது
?

தாயின் மகிமை

அன்பின் வடிவமாய் - நல்
அறிவினை ஊட்டி
பண்பாக வளர்த்து
பாசமதைத் தந்து
இன் சொற்கள் பேசி
இல்லத்தை இன்பமாக்கும்
அன்னையவள் வாழ்க - எம்
அன்புத் தெய்வமாய்

தவறுகள் செய்தாலும்
தயவுடன் வினவி
தன்மையாய்க் கண்டித்து
தக்க புத்தி கூறிடும்
தாயைப் போலன்பு
தரணியில் கிடைக்குமா?

பாசத்தின் உறைவிடமாய்
பண்பின் பிறப்பிடமாய்
பாங்கான வழிகாட்டி - நல்
பாதையில் நாம் செல்ல
பல வழிகளிலும் எமக்கு
பலனேதும் பாராது
பணிவிடைகள் பல செய்து
பாரினில் சிறக்க வைக்கும்
பாசத்தெய்வமன்னையே

அம்மா என்றிட அன்பு உருகும்
அம்மா என்றிட ஆசை தவளும்
அம்மா என்றிட அகமே சிறக்கும்
அம்மா என்றிட மனமே மகிளும்

அம்மாவைக் கண்டவுடன் துன்பம் நீங்கும்
அம்மாவைக் கண்டவுடன் நோய்கள் அகலும்
அம்மாவைக் கண்டவுடன் வலியும் தீரும்
அம்மாவைக் கண்டவுடன் பசியும் பறக்கும்
அம்மாவை நினைத்தால் வாழ்வில்
எல்லாமே கிடைக்கும்
வாழ்க தாய்க்குலம்
வளர்க நம் சந்ததி

நண்பனே நண்பனே

நண்பனே நண்பனே ஆருயிர் நண்பனே
நாளைய உலகம் காண்போமா ?
நான் உன்னை சுமக்க
நீ என்னை தாங்க
நட்பினை நெஞ்சில் கொள்வோமா ?
நம்பிக்கை நம்மில் தளராதே
நம் பாசம் எம்மில் விலகாதே
இரு கை சேர்ந்தே உலகை ஆள்வோமே
இதைக் கண்டு இயற்கையும் வியக்குமே !
நீ அருகில் இருக்கையில்
தோல்வி என்னை நெருங்காதே !
நண்பா உன் சொல்லில்
தீமை என்று கிடையாதே !

உறுதியோடு வாழ்.


நியமற்ற இவ்வுலக வாழ்விலே
நிழல்களைக் கண்டு
உன்னை நீயே
ஏமாற்றிக் கொள்ளாதே..!
நீ எதற்காகப் பிறந்தாய்
தோல்வியினைக் கண்டு துவழவா..
இல்லை..!
வெற்றியைக்கண்டு அகந்தை கொள்ளவா..
அதுவும் இல்லை..
வெற்றியையும் தோல்வியையும்
இரு கண்களாய்க் கொண்டு
உறுதியுடன் வாழப் பழகிடு...
சமுதாயம் எனும்
குப்பைத்தொட்டியிலே – நீ
குன்றிமணியாய் வாழ்ந்திடு
நீ எதற்காக அச்சமடைகின்றாய்..
சமுதாயத்திற்காகவா...
சமூக சாஷ்திரத்தை ஒருபுறம்
மூட்டை கட்டு..
உனக்காக பிறர் அழுவதையோ..
சிரிப்பதையோ..
விரும்பாதே.. – உனக்காக
நீயே அழு..
நீயே சிரி..
உன் இலட்சியகளை வென்றிடு...
உன்னை வெல்ல
யாரும் இல்லை என்ற
உறுதியோடு வாழ்..
 ..




Saturday, December 25, 2010

புத்தாண்டே வருக.. வருக.


இடர்பல களைந்து
துயர்பல  துடைத்து
இறுமாப்பு  உடைத்து
துன்பம்  நீங்கி...
இன்முகம் கண்டு
இறையருள்   வேண்டி
இன்பம் பெற்று
இப்புவியில்  வாழ ...
எல்லோர்   முகத்திலும்
புன்னகை  மலர
புத்தம் புதிய
ஈராயிரத்து  பதினோராம்
புத்தாண்டே வருக... வருக
வருக...வருக...வருக
.

அம்மா (amma)

அன்பென்றால் அம்மா உன் வடிவல்லவா
அணைப்பதே உந்தன் தொழில் அல்லவா- என்
கண்கண்ட தெய்வம் நீ அல்லவா
கடவுளாய் காண்பேனே உன்னை அல்லவா


உணர்வின் உறைவிடம் உன் மனமல்லவா -என்
உலகின் அறிமுகம் உன் முகம் அல்லவா
அழகாய் சிரிப்பது உன் குணமல்லவா
அடித்தாலும் அணைப்பது தாய் இனமல்லவா


ஐயிரு மாதங்கள் என்னைத் தாங்கினாய்
ஆயிரம் கடவுளை நீ வேண்டினாய்
இரத்தத்தை பாலாக்கி என்க்கு ஊட்டினாய்
இசைப்பாட்டு நீ பாடி என்னைத் தாழாட்டினாய்
அழகான பெயர் ஒன்றை நீ சூட்டினாய்
அன்பாக நான் வாழ வழிகாட்டினாய்
ஒரு ஜென்மம் போதாது உன் சேயானால்
ஒருகோடி ஜென்மம் எடுப்பேன் நீயே என் தாயானால்...

Monday, December 20, 2010

நான் உன்னை பிரிகையில் மழை



உன்னை விட்டு பிரிந்து வருகையில்
மண்ணை தொட்டு விடுகிறது மழை..
ஏன் புரிகிறதா?
 என் விழிகளில்
கண்ணீர் வர கூடாது என்பது உன் உத்தரவு
அதனால் எனக்காக
மேகம் வடிக்கும் காதல் கண்ணீர்..
.

Saturday, December 18, 2010

உன்னை போல் ஒரு நட்பு

உயிர் உள்ளவரை வாழும் உண்மையான நட்பு உறவென்று சொல்லிக்க யாரும் இல்லாவிட்டாலும் உயிர் என்று சொல்லிக்கொள்ள ஒரு நட்பு இருந்தால் போதும் உன்னை போல




கேட்காமல் கிடைத்த உறவு நீ மட்டும்தான் தோழியே

நான் நேசித்த அனைவரும்
என்னை நேசிக்க மறந்த போதும்
எங்கோ ஒரு மூலையிருந்து
நீ என்னை நேசித்தாய்...
எனக்கு பிடித்த பொருட்கள் எல்லாம்
கிடைக்காமல் போன போதும்
என்னை உனக்கு பிடிக்கும் என்று,
ஒரு வார்த்தை கூறினாய்...
எனக்காக எல்லோரையும் கேட்டேன்
இறைவனிடம்
ஆனால்...
கேட்காமல் கிடைத்த உறவு...
நீ மட்டும்தான்....
தோழியே....
என்றாவது ஒரு நாள்
நீ என்னை வெறுப்பதாக இருந்தால்..
அதை இன்றே சொல்லி விடு..
இப்போதில் இருந்தே
கற்றுக் கொடுக்கிறேன்...
என்
இதயத்துக்கு....
வலிகளைத் தாங்குவது
எவ்வாறு என்று........!!!!!!!!


அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே அடடா காதலை சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே ஆசையாய் பேசிட வார்த்தைகள் போதிடும்

Friday, December 17, 2010

உடன் பிறப்பே

எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
உன் தங்கை நானாக வேண்டும்
உன்னை போல் யாரும் என்
மேல் அன்பு வைத்ததில்லை

உன்னை போல் யாரும் என்னை
இத்தனை விரிவாய் அறிந்ததும் இல்லை
நட்புடன் கொண்ட உடன் பிறப்பே
இப்பிறப்பில் உன்னால் கிடைக்கின்ற

அன்பு வாழ்த்துக்கள் என்
கல்லறையிலும் அழியாத
தொடரா வந்து சேர அங்கேயும்
உன் அன்பில் வாழ்ந்திட

விழியிலே என் விழியிலே கனவுகள் கலைந்ததே உயிரிலே நினைவுகள் தலும்புதே

அப்பா......

சின்ன வயதில்
நீங்கள்
செய்த சேட்டையை
நான் ரசிக்க
நீங்கள்
என் மகனாய்
பிறக்க வேண்டும்......

கண்ணீர்.!

பிறரிடம் பகிரமுடியாத
வேதனைகளை கூட
ஆற்றிட விழிகளில்
ஊற்றெடுக்கும் அருவி

அம்மா...

அடி முடி தேடினாலும்
அகராதியை புரட்டினாலும்
முழுமையான அர்த்தம்
அறிய முடியாத உயிர்ச் சித்திரம்.
அம்மா

நட்பு

நட்பு ஒரு பிறப்பல்ல.
அழகிய அவதாரம்.
ஆண்டவன் வரைந்த
வரைபடம் நட்பு.
அதி சிறந்த பரிசு
நட்பு.
நட்புக்கு நிகர்
நல்ல நட்பே!
அழகிய மாடம் நட்பு.
தூய்மை அதன் அரண்.
மெய்யாய் இருக்கும் வரை
மெய்க் காவல் நட்பு!
உன்னை எடை போட
உன் நட்பு போதுமாகும்.
நம்பிக்கை நாணயம்
சேர்ந்த கலவை நட்பு.
துன்பத்தில் சம பங்கு
நல் நட்பு.
உன் விழியில் தூசி
நட்பின் விழியில் கண்ணீர்.
நல்ல நட்பு
நாட்பட்டே கிட்டும்.

உன் பாசம் எல்லாம் வேசமே..!

என் நிழல் என தொடர்வாய் என நினைத்தேன்
என் பகையென மாறினாய்....!
பாசமாய் இருப்பாய் என  நினைத்தேன்
அது வேசம் என சொல்லாமல்
சொல்லிவிட்டு போனாய் ....!
நான் நீயாகவும் நீ நானாகவும்
இருப்பாய் என நினைத்தேன்...
ஆனால்  என் உயிர் வாங்கி  போக வந்தவன்
நீ என்று அப்போ நினைக்கவில்லையே ....!
பேசத் தெரிந்தும் ஊமையாய் மனதுக்குள்
குமுறி குமுறி கதறுகிறேன்...
பேதை இவள் தவியாய் தவிக்கிறாள் ...!
வரும் கால வாழ்வை எண்ணி துடியாய் துடிக்கிறாள்..!

கண்கள் கலங்கினாலும்

கண்கள் கலங்கினாலும்
கனவுகள் கலைவதில்லை
உதடுகள் சிரித்தாலும்
உள்ளம் சிரிப்பதில்லை 
உன் மனதில் நான் 
இல்லாவிட்டாலும்
என் மனதில் நீயே வாழ்கிறாய்

Thursday, December 16, 2010

மரணத்தின் வாசலில்...

மனத்தின் ரணங்களால்
மரணத்தின் வாசலில்
மண்டியிட்டு தினமும்
கண்ணீர் வடிக்கும்

நான்
ஒரு பெண்
என்னோடு கதை
ஆனால் வதைக்காதே

நான்
ஒரு நிலவு
என்னை ரசித்திடு
தொட நினைக்காதே

நான்
ஒரு கிளி
எனை பறக்கவிடு
அடைக்க முயலாதே

நான்
ஒரு வாசமுள்ள பூ
மோர்ந்து பார்
கசக்கி எறியாதே

நான்
ஒரு புல்லாங்குழல்
என்னை வாசித்திடு
முறித்து எறியாதே

நான்
ஒரு புரியா கவிதை
எடுத்து படி
மடித்து வீசாதே

நான்
ஒரு நெருப்பு
எரிய விடு
அணைக்காதே

தயவுசெய்து
தள்ளி நில்லு
எனை அணைக்காதே
மரணத்தின் வாசலில் நான்

கல்லூரி நட்பு

எங்கோ பிறந்தோம்!
எங்கோ பிறந்தோம்!
எங்கோ வளர்ந்தோம்!
அனைவரும் இங்கே!
சந்தித்துக் கொண்டோம்!
இதயத்தை நட்பால
சிந்தித்துக கொண்டோம்!
முகங்களைப் பற்றி
யோசித்ததுமில்லை!
இனம் பணம் பார்த்து
நேசித்ததுமில்லை!
எதிர் பார்ப்புகள்
எதுவுமில்லை!
ஏமாற்றங்கள்
சிறிதுமில்லை!

அவரவர் கருத்துக்களை
இடம் மாற்றிக்க கொள்வோம்!
பாரட்டுக்களை
பரிமாறிக்க கொள்வோம் !
சின்ன‌ சின்ன‌
ச‌ண்டைக‌ள் இடுவோம்
சீக்கிர‌த்திலேயே
ச‌மாதான‌த்திற்கு வ‌ருவோம்!
கவலைகளை
கிள்ளி அறிவோம்!
இலட்சியஙகளை
சொல்லி மகிழ்வோம்!
உழைப்பை பெருக்க
உற்சாகம் தருவோம்!
நலத்தை பெருக்க
நம்பிக்கை தருவோம்!
நன்மைகள் வளர
முயற்சிப்போம்!
நட்பால் உயர்ந்து
சாதிப்போம்!
 
. 

நட்பு வேண்டும்

மழலைப் பருவத்தில்
பார்த்து வியக்க
ஒரு நட்பு...

குழந்தைப் பருவத்தில்
ஓடி விளையாட
ஒரு நட்பு...

காளைப் பருவத்தில்
ஊர் சுற்ற
ஒரு நட்பு...

வாலிபப் பருவத்தில்
பேசி ரசிக்க
ஒரு நட்பு...

முதிர்ந்த பின்
அனுபவங்களைப்
பகிர்ந்து கொள்ள
ஒரு நட்பு...

நட்புகள் ஆயிரம் இருந்தும்
நட்பின் தேவை குறையவில்லை...

தேவையின் போது
தோள்களில் சாய
நட்பு வேண்டும்...
துன்பத்தின் போது
கண்ணீர் துடைக்க
நட்பு வேண்டும்...

மகிழ்ச்சியின் போது
மனம் மகிழ
நட்பு வேண்டும்...

நானாக நானிருக்க
நட்பே...
நீ எனக்கு
நட்பாக வேண்டும்
...
 

மரணமே வந்தாலும்

அம்மா வயிற்றில் சுமந்தால்
அப்பா தோளில் சுமந்தார்
காதலி இதயத்தில் சுமந்தால்
நண்பா
நான் உன்னை சுமக்கவில்லை
ஏனென்றால் நட்பு ஒரு சுமையல்ல

நிழல் கூட மாலை நேரத்தில் பிரியும்
என் நினைவுகள் உன்னை விட்டு என்றும் பிரியாது

மரணமே வந்தாலும் உன்னை மறக்காத இதயம் வேண்டும்
மீண்டும் ஜனனம் என்றால் அதில் நீயே வேண்டும்
உரவாக அல்ல என் உயிர் நட்பாக

புரியாத நட்புக்கு அருகில் இருந்தாலும் பயனில்லை
புரிந்த நட்புக்கு பிரிவு ஒரு தூரமில்லை

நம் வெற்றியின் போது கை தட்டும் பல விரல்களை விட
தோள்வியின் போது கை கொடுக்கும் நண்பனின் ஒரு விரலே சிறந்தது
 

கனவுகளே .....

இரவின் கனவுகளில்
விழிகள் கண்ட நிழல்களின்
நிஜங்களைத் தேடிய
வாழ்க்கை பயணத்தில்
காயங்களோடு திரும்பியது
மதியும் மனமும்
விழிகளோடு கோபம்வேண்டாம்
வருகையைத் தொடருங்கள்

காயங்கள் ஆறியபின்

Wednesday, December 15, 2010

GOD

Engum irupen endrar kadavul
Silayil than iruka vendum endran manithan
Ethilum irupen endrar kadavul
Alayathil than iruka vendum endran manithan
Padaikum kadavulaiye atti padaikiran manithan
Vingana valarchi.........

வெற்றி உன் காலடியில் !

கவலையையும் சோம்பலையும்
கழற்றி எறிந்துவிட்டு
உற்சாகத்தை
உடுத்திக்கொள் !
உன் பலகீனங்களை
உழைப்பெனும் 
பலம் கொண்டு
பலகீனப்படுத்து!!
நீயே சரணாகதி என்று
எப்போதும் வெற்றி
உன் காலடியில் தவம் கிடக்கும் !

Life!

Don't waste time,
Life is Gold,
Enjoy it
Before you disapear!

If we could come back
in time,
It's really miraculous!!!

என் கனவு இல்லம்

என் கனவு இல்லம்
வீட்டின் முகப்பின்
இரு மருங்கிலும் ரோஜாக்கள் !
உள்ளே
படர்ந்து விரிந்த பெரிய கூடம்
நடுவிலே ஊஞ்சல் !
படுக்கையில் படுத்து
அண்ணார்ந்து பார்த்தால் விண்மீன்கள்!
கதிரவனின் கதிர்கள் காலையும் மாலையும்
என் வீட்டு வாசலை தொட்டு செல்லும்!
இரவில் நிலவின் ஒளியும்
என் வாசலை தீண்டாமல் செல்லாது!
இத்தனையும் கண்டேன் என் கனவிலே!
விரைவில் நிறைவேறும் நினைவிலே
!

கவிதை

என்னவனே உனக்காக பல கவிதைகளை வடித்து வைத்தேன் ஆனால் உன்னிடம் கொடுக்காமல் என் இதய குப்பை தொட்டிக்குள் போட்டுவிட்டேன் ஏனென்றால் நீயே ஒரு கவிதை பெட்டகம் உனக்கேன் நான் வடித்த கவிதைகள்!

"நீ என்னை நேசிக்கிறாய்"


"நீ 
என்னை நேசிக்கிறாய்" என்று சொல்வதை விட..
"நீ 
என்னை பிரியமாட்டாய்" என்று சொல்வதைத்தான் 
நான் அதிகம் விரும்புகிறேன் 
தோழி...!

friendship

Yennodu nee irunthalum illai yendarlum,
mannodu puthayum varai nenjodu vaitherupen,
un ninaivugalai. 
That is friendship

பிரியாத வரம் வேண்டும்..!

எப்போதும்
என் தனிமையில்
துணையாகும் உன் மனது
படிக்கின்ற வேளையில்
பாடமாக
உந்தன் குறும்புகள்
ம்ம்ம்
முதல் முதல்
புன்னகை முகத்தோடு
கையிலே ரோஜா மலரோடு
கல்லூரி வாசலிலே நீ காத்திருந்த
ஞாபகம் எப்போது நினைத்தாலும்
என்னை மலரவைக்கும்
இது மட்டுமா
அடிக்கடி உன்னைத் தேடிப் பார்க்கும்
கண்கள் தொலைவினில் நீ என்பதை
மறந்து என்னை ஏங்கவைக்கும்
இதயம் துடிக்கும் போதெல்லாம்
உந்தன் பெயரே ஒலிக்கும் காதோரம்
காதலனே காதலனே
கவிதையால் இணைந்தோம்
காலமெல்லாம் சேர்ந்து வாழ
இனி ஒரு பிரிவு வேண்டாம்
இமைப்பொழுதில் வந்துவிடு
உயிராக உனைச் சேர வரம் தந்து
உன்னோடு எனை வாழ வை

என் இனியவனே!!!

ஒவ்வொரு எழுத்தாய் உந்தன்
பெயரை எழுதிப் பார்க்கிறேன்
பிடித்த முதல் கவிதையாய்
தெரிவதென்ன என் காதலனே

அழகுச் சித்திரத்தின் உன் முகம்
என்றும் மறையாமல் எந்தன்
இதயத்தில் வரையபட்டிருக்கிறதே
இதுவென்ன என் ஓவியனே

கரை சேர துடிக்கும் அலையப்போல
என் மனம் உனைச் சேர பாய்வதென்ன
என் பாவலனே

என்னை மறந்து நான்
தனிமையில் சிரிப்பதென்ன

தனித்துவமாய் ஏதேதோ
சிந்திப்பதென்ன

காகித பக்கங்கள் எங்கும்
கவிதை என்ற பெயரில் நான்
கிறுக்குவதென்ன என் கவிஞனே

உன் நினைவுகளில் என்னைத்
தொலைத்து உன்னைத்தேடி தினம்
தவிக்கிறேனே

இது என்ன என்
இனியவனே இதுதான்
காதலா..?

இதைத்தான் காதல்
என்பார்களா..?

உன்னைக் காதலித்ததில்
இருந்து புதிய தனி உலகத்தில்
வாழ்வதாய் உணர்கிறேன் நான்