Sunday, February 20, 2011

எங்கள் குடும்பம்

வாங்கிப் போட அப்பா
வரவு செலவு அப்பா
ஓங்கி அதட்ட அப்பா
உண்மை அன்பு அப்பா!

சமைத்துப் போடும் அம்மா
வாசல் தெளிக்க அம்மா
படிப்புச் சொல்ல அம்மா
பாசம் காட்டும் அம்மா!

நாட்டு நடப்பைத் தினமும்
நாளும் பேசும் தாத்தா
வீட்டுத் தோட்டம் தன்னில்
விதைகள் ஊன்றும் தாத்தா!

கையில் சோறு போட்டு
கதைகள் சொல்லும் பாட்டி
தெம்பு தரும் பாட்டி
கம்பு ஊன்றும் பாட்டி!

கொண்டை போடும் அக்கா
கோலம் போடும் அக்கா
சடையைப் போடும் அக்கா
சட்டையை தைக்கும் அக்கா!

கொட்டம் அடிக்கும் தம்பி
கூட்டம் கூட்டும் தம்பி
பட்டம் விடும் தம்பி
பம்பரம் ஆடும் தம்பி!

ஒன்றாய் கூடி உண்ணுவோம்
உலகச் செய்தி பேசுவோம்
நன்றாய் தூங்கச் செல்லுவோம்
நாள்கள் தோறும் மகிழுவோம்!


Wednesday, February 16, 2011

உன்னை மட்டும் சுமக்கிறது இதயம்

மனதின் உணர்வுகளை
வார்த்தைகளால் சொல்ல இயலவில்லை
இருந்தும் ஏனோ உன்னை
நினைக்காமல் இருக்க முடியவில்லை

மனம் இரண்டும்
இடம் மாறி இருந்தாலும்
இதயம் உன்னை மட்டும்
சுமக்கிறது தினந்தோறும்

என்றென்றும் உன் நினைவுகள்
தடம் மாறி போகாது
என் நிலை மறந்த போதும்
உன்னை நான் என்றும் மறப்பதில்லை

கண்ணிமை கவிழும் போது
கனவுகள் கூட பாடாய் படுத்துகிறது
உன் நினைவுகளை கொடுத்து

நீ எங்கிருப்பினும்
உன் நினைவுகள் மட்டும்
கோர்வைகளாய் இருக்கிறது என்னுள்...

Tuesday, February 15, 2011

என் பிரியமானவனே


எதற்காய்
இத்தனை பெரிதாய்
எனக்குத்தண்டனை,
தூரதேசம் சென்றாலும் என்
தூயஅன்பு உனை
தொடரவில்லையோ?
என் சிரித்த
அழகியமுகம்
உனைப்பயமுறுத்தியதில்லையே?
உன் தனிமை
உணர்த்தியிருக்குமே
என் உள்ளத்தை,
கண்ணீர் கூட
விட்டிருப்பாயே என்
காதலை எண்ணி?
இரகசியங்கள் பல
நமக்கு மட்டுமாயே
தெரிந்தவற்றை நீ
அடிக்கடி யோசித்து
அழுதும் இருப்பாய் என்பதில்
ஐயமில்லை எனக்கு.
என் பிரியாணி வாசம்
உன் பசித்த வயிற்றில்
என்னை நிறைத்திருக்குமே?
சண்டைகளைக் கூட
சரித்திரமாய் எண்ணி
ரசித்திருப்பாயே?
இவை எல்லாம்
நிகழ்ந்திருந்தால் நீ
இன்னும் என் பிரியமானவனே.
யாரும் நுழையமுடியா
அவசர அணைப்புடன்
அன்புடைய நான்.

காதலர் தினம்


அன்பே சோ்ந்திருந்தது சில நாள் 
பிரிந்திரிந்தது பல நாள் - பிரிவிலும்
சுகம் கண்டேன்
உண்மையான உன் அன்பினால்
இரந்தும் பிரிவே
தொடர்கின்றது - நமக்குள்
என்று வரும் இந்த
பிரிவிற்கு முற்றுப்புள்ளி
காத்திருக்கும்  களங்கமில்லா
காதல் சாகும் வரை   
காத்திருக்கிறேன் அன்பே
அடுத்த காதலர் தினத்தில்
ஆவது ஒன்றுசோ்வோம்
என்ற நம்பிக்கையில்....

Saturday, February 5, 2011

யார் இவன் ?


புது உலகை நோக்கும்
புத்தம் புது புத்தி சாலியோ . . .

பார் என பல பேர் சொல் கேட்டு - இந்த
பாரதத்தை ஆழ வந்த மழலையோ.. 
 .

குற்றம் என்பதை சிறிதும் அறியா இளம் மகானோ 
நீ வா
இப்பூவுலகை

ஆழ
உனக்காக காத்திருக்கிறது
பல மேடைகள் பல பட்டங்கள்
உன்னை வரவேற்க நாங்கள் . . .

வெற்றியின் வாசல்

இதம் எனும் நான்கெழுத்தில்
இதம் எனும் சுகம் ஒளிந்திருக்கிறது
அதைப் புரிந்து கொண்டால்
இதமாய் வாழலாம் என்றும் வாழ்வினிலே.



வாழ்க்கை எனும் படகினிலே
வாகை எனும் வெற்றி ஒளிந்திருக்கிறது
அதைப் பிடித்துவிட்டால்
சுகமாய் வலம் வரலாம் என்றும் வாழ்வினிலே.


ழைப்பு எனும் உயர்வினிலே
உப்பு நீர் எனும் வியர்வை ஒளிந்திருக்கிறது.
அதை வெளியேற்ற வெளியேற்ற
பிரகாசமாய் சுடர் விடலாம் என்றும் வாழ்வினிலே.